இதயம்...
தீராப் பெரும்விழைவுகளினூடே
ஓடும் குருதியோட்டத்தில்
இனிய இசை லயத்துடன்
துடித்துக் கொண்டிருக்கிறாய்....
வாழ்தலுக்காக மட்டுமா?
நினைவுகளுக்கு புகழிடமாய்
உயிருக்கு உறைவிடமாய்
அன்பிற்கு அடையாளமாய்
இருப்பினை உணர்த்தும்
இனிய இதயமாய்...
------------------------------------------------------
மகிழ்வின் பேரலைகள்,,,,
நீண்டதொரு
வாழ்க்கைப் பயணத்தின்
எண்ணிலடங்கா கசப்புகள்
மனதினுள் வேரூன்றி கிளைபரப்பி
மரமென விரிந்து நிற்கும்...
ஆழம் ஆழமென இன்னும்
அழுந்தச் செய்கையில்
முட்டி மோதி
பிளந்து பீறிட்டெழும் ....
அத்தருணங்களினூடாக – நாம்
அறியப்படுகின்றோம்
மிகக்கொடியவர்களாக....
அவ்வாறாயினும்,
இதுநாள் வரை கொண்டிருந்த
பொய்முகம் கழற்றி
வீசியதுணர்ந்து
எழும்பும்....
மகிழ்வின் பேரலைகள்!!
---------------------------
பாரதி....
கண்ணனின் கரிய நிறத்திலும்
கண்ணம்மாவின் பே ரழகிலும்
கண் சொக்கி நின்றவன் நீ....
நிலை கெட்ட மானிடரைக் கண்ட
பொழுதெல்லாம் நெஞ்சு துடித்தாய்...
காக்கைக் குருவி யெல்லாம் உன்
சாதி எனக் கொண்டாடினாய்...
நிற்பவை, நடப்பவை,
இருப்பவை, பறப்பவை எல்லாம்
உனக்குச் சொப்பனந் தான்...
ஓடி விளையாடவும்,
கூடி விளையாடவும்
சொல்லிக் கொடுத்தவன் நீ...
தந்தையும், தாயும்
மகிழ்ந்து குலாவக்
கண்டு களித்தவன் நீ...
அக்கினிக் குஞ்சினால்
வெந்து தனிந்த காட்டினில்
ஆன்ந்தக் கூத்தாடினாய் நீ...
தனியொரு மனிதனுக் குணவில்லாத போது
உலகையும் அழிக்க துணிந்தவன் நீ....
உச்சி மீது வானிடிந்தும்
அச்சம் கொள்ள மாட்டாய்... - ஆனால்
நஞ்சை நண்பன் கொடுப்பினும்
அச்சமின்றி உண்ணத் துணிவாய்...
வெள்ளிப் பனிமலை மீதுலாவும்
பள்ளிகளை கோவிலாக்க எண்ணினாய்...
காசி நகர் புலவர் உரை
காஞ்சியிலே கேட்பதற்கு கருவி செய்யவும்
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடவும்
கனவு கண்டாய்....
உன் கனவுகள் எல்லாம்
நிஜமாய் தான் ஆனது ....
நீ பாடாதது ஏதேனும் உண்டா?
தேடிப் பார்க்கிறேன்...
...................
எதுவும்இல்லை....
எப்பொழுது ஈன்றெடுப்பாள் தமிழன்னை?
உன்னைப் போல இன்னொரு மகனை...
--------------------------------------------------------------
No comments:
Post a Comment