பிறப்பின் அர்த்தம் சொல்லும் கவிதையே
எழுத்துப் பேரணியில் நட்புக்கு இது இலக்கணப் பாலம்
உணர்வுப் புரட்சியில் அமைதித்தூதுவன் நீ
சலனங்கள் இல்லாத சாத்வீகம் நீ
காணும் கனவுகளுக்கு நட்புக் கைகோர்த்து
நினைவுப் பாதையில் துணையாய் வந்தாய்
சிலநேரம் எழுச்சிகள் பலநேரம் வீழ்ச்சிகள்
தடுமாறும் என்இதயத்தை தாங்கி நின்றாய்
துன்பக் கோடையின் உச்சி வேளையில்
சாரல் மழையாய் உந்தன் சொற்கள்
புயலும் தென்றலும் என்னுள் சங்கமித்தால்
சாந்தமாய் நின்று எனை மனிதனாக்கினாய்
உயிரில் வாழும் உண்மை உணர்வுக்கு
உதவும் கரங்கள் தந்தாய் நீ
எந்தன் சுய சரிதைப் புத்தகத்தின்
முன்னுரைப் பக்கங்கள் தந்தவள் நீ
உள்ளத்தில் காயம் நேர்ந்தால் சுகமாக்கும்
சுவாசத்தின் ஆக்ஸிஜன் அணு நீ
வெள்ளை உள்ளம் கொண்டு வேதாந்தம்
இல்லா சித்தாந்த நட்பை அளித்தவள் நீ
வாழும் பொழுது வந்துவிட்டாய்
வீழ்ந்தபின் வந்துவிடுஎந்தன் கல்லறையில்
ஒற்றை ரோஜாவாய்...
---
உன்னை முதல் முதலாய் பார்த்தபோது
எனக்கு தெரியாது
என் மரணதேதி குறிக்கப்பட்டு விட்டதென்று
---
சிறகுகளில் இருந்து
உதிர்ந்த இறகொன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது
---
உதிர்ந்த இறகுகள்
காற்றில் அலையலையாய்
தள்ளாடுகின்றன...
கடைசி வரை
மௌனித்திருந்தேன் நான்
தேடலின் சிறகுகள் கழன்று
மலைகளுக்கப்பபால் விழுந்தன
---
எனக்கு உன்னிடம் பகையில்லை
அன்பைப் போலவே...
---
எங்கோ மழைக்காக காத்திருந்தது
வெடித்துப்போன நிலம்
வானங்களில் மிதந்து கொண்டிருந்த
மேகங்கள் நிலம் குளிர
நின்று பொழியும் என நான்
நினைத்திருக்கையில்
காற்றெதுவும் வீசாமலேயே
கலைந்து போயின…
---
வெயில் வரும்
இலை உதிரும்
வெண்பனி தழுவும்
எலும்பை ஊடுறுவும்
குளிரும் வரும்
பிரபஞ்சமே
உறைந்து போகும்
இருள் போர்வை போர்த்தும்
மீண்டும் ஒளித்திரளாய் பகல் நீளும்
ஏதாவது ஒன்று மோதிக்கிழிக்குமா?
இறுகிய இதயத்தினை…
---
நான் விரும்பும் யாரையும் பாராமல்
வெறுப்புமிகும் முகங்களையே
பார்க்கும் விதி
எனக்கு என்றபோது
இருப்புக்கும் வாழ்வுக்கும்
என்ன வித்தியாசம்?
---
காற்றுக் குதிரையில்
சூரியனைத் தேடி
வான்நோக்கிச் செல்லும்
பறவையே
நேற்றைய சூரியன்
எங்கு தொலைந்தது?
---
அன்று
மேற்கு புறமிருந்த என்
வீடேஉனக்கு சூர்யோதயம் என்றாய்
இன்று
உன்மகனின்
எது மேற்கு என்ற கேள்விக்கு
சூரியன் மறையும் திசையை
சுட்டிக்காட்டுகிறாய்
என் ஆத்மாவின் சிநேகிதனே
காலங்களோடு
மனிதர்கள் மாறுவது தெரியும்
திசைகளைச் சுட்டும் வகைகளும்
மாறுமா?
---
இரசித்த எஸ்.எம்.எஸ் கவிதைகள்
உரசிக்கொண்டது
பார்வைகள் தான் என்றாலும்
வலிப்பதென்னவோ இதயத்தில்…
---
என் மதுக்கோப்பை காலியாக இருக்கிறது
உன் இதழ்களின் துளிகளை நிரப்பி வை
---
காதல் ஒரு கனவுதான்
சிலபேருக்கு பலிக்கும்
சிலபேருக்கு வலிக்கும்
---
அடாத மழையிலும்
விடாது நனைவேன்
உன் தாவணி எனக்கு
குடையானால்
---
உனக்கு காய்ச்சல் என்றால்
நெருப்பாய் கொதிக்கிறது
என் மனது
---
நீ... நான் வாங்கி வந்த சாபம்
நான்... நீ வாங்க மறுக்கும் வரம்
---
உன் நினைவாக என்னிடம்
உன் நினைவைத் தவிர
வேறொன்றுமே இல்லை
---
விடியவிடிய கவிதை எழுதிப் பார்க்கிறேன்
ஆனாலும் ஒரு கவிதையும்
உன்பெயரைப் போல இல்லை
No comments:
Post a Comment