July 06, 2007

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் வரும் பூக்கள்

...... வள்இதழ்,
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தன்கயக்குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உளந்துழ், கூவிளம்,
எரிபுரை, எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவளம், வாகை, வான் பூங்குடசம்,
எருவை, செருவிளை, மணிபூங், கருவிளை,
பயனி, வானி, பல் இனர்குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இனர்க் காயா,
விரிமலர், ஆவிரை, வேரல், சூரல்,
சூரிகிப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கவிமா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,
தாழை, தாளம், முள்தாட் தாமரை,
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல் கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிகுவைக்கள் கமழ் நெய்தல்,
பாங்கர் மராஅம், பல் பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்;கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாராம்,
தும்மை, துழாஅய், சுடர்பூந்தோன்றி,
நந்தி, நறவம், நறும், புன்னாகம்,
பாரம், பீரம் பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்...

உங்களுக்கு எத்தனை பூக்கள் தெரியும்?

No comments: