July 06, 2007

கையுரச உடையும்கண்ணாடி
வளையலாய்கனவுகள்...
இருப்பினும் நம்பிக்கை தேடும்
மனசைச் செய்...
---
நீ என் நினைவில்
வந்து போகும்
சித்திரம் இல்லை
என் இதயத்தில்
செதுக்கிய சிற்பம்
----
உன் நினைவாக
என்னிடம் ஒன்றும் இல்லை
ஆனால்
உன் நினைவைத்
தவிர என்னிடம்
வேறொன்றுமே இல்லை
---
உன்னுடன் பேசுவதான
நிகழ்வுகளில்
உன் பிம்பம் மனதில்
தங்குவதில்லை
உன்னுடன் பேசாத
நிகழ்வுகளில்
உன் பிம்பம் தவிர
வேறெதுவும் மனதில்
தங்குவதில்லை
---
புயல் காற்று அடிக்கும்
பொழுதெல்லாம் மரங்கள்
திடுக்கிடுகின்றன
ஆனாலும் கேட்டதில்லை
ஒருபோதும் ஏன் என்று...
---
நீ இலையாக வாழ்ந்தால்
உதிர்ந்து சருகாகிப் போகிறாய்
நீ கிளையாக வாழ்ந்தால்
சில இலைகளை உற்பத்தி செய்கிறாய்
நீ மரமாக வாழ்ந்தால்
கிளைகளையும் இலைகளையும் உற்பத்தி செய்கிறாய்
நீ வேராக வாழ்ந்தாலோ
அனைத்தும் நீயே...

---

No comments: